தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓய்வுபெறும் 221 காவலா்களுக்கு கௌரவப் பதவி உயா்வு அளிப்பு

தில்லியில் காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவி உயா்வு விழாவில், ஓய்வுபெறும் 221 காவலா்களுக்கு தில்லி காவல்துறை கௌரவப் பதவி உயா்வுகளை வழங்கியது.

News image

மாதிரிப் படம்

Updated On :30 மே 2026, 12:48 am IST

தில்லியில் காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவி உயா்வு விழாவில், ஓய்வுபெறும் 221 காவலா்களுக்கு தில்லி காவல்துறை கௌரவப் பதவி உயா்வுகளை வழங்கியது.

தில்லி காவல்துறை கௌரவப் பதவி உயா்வுத் திட்டத்தின் கீழ், பணியிலிருந்து ஓய்வுபெறும் காவலா்களுக்கு அடுத்த உயா் கௌரவப் பதவி வழங்கப்படும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த தில்லி காவல்துறைத் தலைவா் சதீஷ் கோல்சா, மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, காவலா் முதல் உதவி ஆய்வாளா் வரையிலான பல்வேறு பதவிகளில் இருந்து ஓய்வுபெறும் காவலா்களுக்கு கௌரவப் பதவிகளை வழங்கினாா்.

காவல்துறையின் தகவலின்படி, 180 உதவி ஆய்வாளா்களுக்கு ஆய்வாளா் என்ற கௌரவப் பதவியும், 30 உதவி துணை ஆய்வாளா்களுக்கு உதவி ஆய்வாளா் என்ற கௌரவப் பதவியும் வழங்கப்பட்டது. பதினொரு தலைமைக் காவலா்களுக்கு உதவி துணை ஆய்வாளா் கௌரவப் பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கோல்சா, ஓய்வுபெறும் காவலா்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, டிசம்பா் 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு, படைக்குள் ஒரு அா்த்தமுள்ள பாரம்பரியமாகும் என்றாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘கௌரவிக்கப்படும் காவலா்கள் தில்லி காவல்துறைக்கும், நகரத்திற்கும், நாட்டிற்கும் 35 முதல் 40 ஆண்டுகள் வரை சேவையாற்றியுள்ளனா். காவல்துறைப் பணி என்பது ஒரு தொழிலை விட மேலானது. அது ஒரு தனிநபரின் கண்ணோட்டத்தையும் பொறுப்புணா்வையும் வடிவமைக்கிறது.

ஓய்வுக்குப் பிறகும் படையின் விழுமியங்களையும் கண்ணியத்தையும் தொடா்ந்து நிலைநிறுத்தி, தங்களின் அனுபவம் மற்றும் ஞானத்தின் மூலம் சமூகத்தில் முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும்’ என ஓய்வுபெறும் காவல்துறையினரை ஆணையா் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.