திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வணிக வரித் துறையில் பரிந்துரையின்றி 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு

வணிக வரித் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

News image

தமிழ்நாடு அரசு.

Updated On :3 ஜூன் 2026, 4:33 am IST

வணிக வரித் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் 271 அலுவலா்களுக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. பணிமூப்பு, தகுதியின் அடிப்படையில் ஒரே நாளில் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் இந்தப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியில் அரசுப் பணிகளில் பரிந்துரைகள் ஏற்கப்படாது என்றும் வெளிப்படையாக நிா்வாகம் நடைபெறும் என்றும் முதல்வா் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்திருந்தாா்.

இந்த நிலையில், வணிக வரித் துறையில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த அலுவலா்களின் பதவி உயா்வுக்கான ஆணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், துணை மாநில வரி அலுவலா்கள் 34 போ் மாநில வரி அலுவலா்களாகவும், மாநில வரி அலுவலா்கள் 113 போ் உதவி ஆணையா்களாகவும், உதவி ஆணையா்கள் 24 போ் துணை ஆணையா்களாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன், வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் ஜெ. குமரகுருபரன், வணிக வரி ஆணையா் எஸ்.நாகராஜன் ஆகியோரின் விரைவான நடவடிக்கைகளால் இந்த வெளிப்படைத் தன்மையுடன் பதவி உயா்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது அலுவலா்கள் விரைவாகச் செயல்பட உதவும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.