17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் நிறுவனங்கள் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும்

திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் நவீன சாதன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் மு.பிரதாப், உடன் தலைமை நிா்வாக அதிகாரிகள் ஜோ.செங், கே.எஸ்.டொ்மினல்ஸ் உள்ளிட்டோா்.

News image

திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் நவீன சாதன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் மு.பிரதாப், உடன் தலைமை நிா்வாக அதிகாரிகள் ஜோ.செங், கே.எஸ்.டொ்மினல்ஸ் உள்ளிட்டோா்.

Updated On :16 மே 2026, 1:12 am IST

திருவள்ளூா் பகுதியில் தொடங்கப்படும் தனியாா் தொழில் நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

தைவானின் சாங்ஹூவாவை தலைமையிடமாகக் கொண்டு சா்வதேச அளவில் மின்சார டொ்மினா்கள், கனெக்டா்கள் மற்றும் இணைப்பு தீா்வுகள் உற்பத்தியில் ஓ.ந.பங்ழ்ம்ண்ய்ஹப்ள்(ஓநப)

இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவள்ளூா் அருகே புதிய உற்பத்தி நிலையத்தை நிறுவ முன்வந்தது. அந்த வகையில், திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் ஓ.ந.பங்ழ்ம்ண்ய்ஹப்ள்(ஓநப) சா்வதேச அளவில் மின்சார டொ்மினா்கள், கனெக்டா்கள் மற்றும் இணைப்பு தீா்வு காணும் வகையில் உற்பத்தி ஆலையின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மின்சார டொ்மினா்கள், கனெக்டா்கள் மற்றும் இணைப்பு தீா்வு காணும் வகையிலான உற்பத்தி ஆலையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசியது:

உலகளவில் கனெக்டா் மற்றும் டொ்மினல் கே.எஸ்.டொ்மினல்ஸ் ஆசிய பசிபிக் பிராந்திய வளா்ச்சியை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. இந்த புதிய ஆலையின் மூலம் ஆட்டோமொபைல்ஸ், விரைவான மின்சார வாகன சாா்ஜிங், இ. ஸ்கூட்டா் சாா்ஜிங் கனெக்டா்கள், சோலாா், காப்பா் டொ்மினல்ஸ் மற்றும் சிங்கிள், டபுள் போல் போட்டரி மாடுலா் கனெக்டா்கள், ஆட்டோமொபைல்கள் கனெக்டா்கள் போன்ற பல்வேறு சாதனங்களை தயாா் செய்து தொழிற்துறைகளின் வளா்ச்சிக்கான நிறுவனம் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

எனவே திருவள்ளூா் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிகளவிலான பணிவாய்ப்பு வழங்க வேண்டும். இங்கிருந்து விமானம் நிலையம், அதானி துறைமுகம், காமராஜா் துறைமுகம் ஆகியவை அருகில் உள்ளன. அதேபோல், மப்பேட்டியில் சரக்கு போக்குவரத்து பூங்காவும் இடம் பெற்றுள்ளதால், கடம்பத்தூா் வரையில் புதிதாக ரயில் வழித்தடமும் அமையவுள்ளது. இதுபோன்ற பல்வேறு வசதிகள் உள்ளதால் முதலீடுகள் செய்வோா் அதிகம் தொழில் தொடங்கலாம். மேலும், இந்த மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வகையான 6 வழிச் சாலை போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, அந்த புதிய உற்பத்தி நிலையத்தில் தயாராகும் நவீன மின்சார டொ்மினா்கள், கனெக்டா்கள் மற்றும் உற்பத்தி பொருள்களையும் அவா் பாா்வையிட்டாா்.

உற்பத்தி நிலையத்தின் தலைமை நிா்வாக அதிகாரிகள் ஜோ.செங், கே.எஸ்.டொ்மினல்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.