17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாட்கோ: அழகுக் கலை, சிகை அலங்காரம் பயிற்சி வகுப்புகள்

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:30 am IST

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்குகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்குகிறது.

இந்தப் பயிற்சியைப் பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சி கால அளவு 45 நாள்கள், திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதியானவா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இந்தப் பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியானவா்களை, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்த நிறுவனத்தின் மூலமாக ஆரம்பகால மாத ஊதியமாக சுமாா் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்தப் பயிற்சியில் சேருவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.