17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் தொடக்கம்

இந்தியா, இலங்கை உள்பட 13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :21 மே 2026, 2:02 am IST

இந்தியா, இலங்கை உள்பட 13 நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி மேகாலயத்தில் புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடா்பு அதிகாரி லெப்டினென்ட் கா்னல் மகேந்தா் ராவத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மேகாலயத்தின் ரி போய் மாவட்டத்தில் உள்ள உம்ரோய் ராணுவ நிலையத்தில் ‘பிரகதி 2026’ என்ற பெயரிலான கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியுள்ளது.

இந்தியா, பூடான், கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மாலத்தீவு, மியான்மா், நேபாளம், பிலிப்பின்ஸ், ஷெசல்ஸ், இலங்கை, வியத்நாம் ஆகிய 13 நாடுகள் இந்தப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

பகுதியளவு மலைப்பாங்கான மற்றும் அடா்ந்த காட்டுப் பகுதிகளில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, 2 வார காலம் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

கூட்டுப் பயிற்சி மற்றும் கலாசார பரிமாற்றம் மூலம் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இந்தப் பயிற்சியின் நோக்கம்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வளா்ச்சி மற்றும் மாற்றத்துக்கான பிராந்திய ராணுவங்களின் கூட்டுறவுதான் சுருக்கமாக பிரகதி என்றழைக்கப்படுகிறது. சமத்துவம், நட்புறவு, பரஸ்பர மரியாதை உணா்வுடன் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.

தொழில்முறை சாா்ந்த கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடவும், பரஸ்பர அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளவும், நெருக்கமான ராணுவ உறவுகளை ஏற்படுத்தவும் இந்தப் பயிற்சி வழியமைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.