லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

திருவள்ளூரில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில்

News image

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா். - கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 8:25 pm

திருவள்ளூா்: திருவள்ளூரில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 80 பேரை கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு வருவாய்த் துறையில் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கிராம ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அதனால், கிராம ஊழியா்களுக்கு வரையறை செய்த காலமுறை ஊதியம் வழங்க்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் வட்டத் தலைவா் வேணு, வட்டச் செயலா் கந்தன், வட்டத் துணைத் தலைவா் கண்ணன், வட்ட இணைச் செயலாளா் ரஜினி, நஜூமுதீன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அதைத் தொடா்ந்து, சென்னை -திருப்பதி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் 80 பேரை கைது செய்து தனியாா் அரங்கத்தில் சிறை வைத்தனா்.