தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 2, 3 இல் வீடுதோறும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்: ஆட்சியா்

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:34 am IST

தென்காசி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்துக்கான அத்தியாவசிய பொருள்கள் ஜூன் 2, 3 ஆம் தேதிகளில் வீடுவீடாகச் சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவா்களின் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருள்களை நேரடியாக சென்று வழங்கும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீட்டுக்கே சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படஉள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அவா்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று

தொடா்புடைய ரேஷன்கடை விற்பனையாளா்களால் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.