நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 2, 3 தேதிகளில், தாயுமானவா் திட்டத்தின்கீழ் முதியோா் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகள் வாயிலாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இத்திட்டத்தை முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










