இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க எம்எல்ஏ கோரிக்கை

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 5:04 am IST

தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, அவா் அனுப்பியுள்ள மனு:

வாரத்திற்கு 3 நாள்கள் இயக்கப்பட்டு வரும் (எண்: 20683/20684) தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி சேவையாக இயக்க வேண்டும் என்பது தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தென்காசியில் இருந்து சென்னைக்கு இதுவரை தினசரி ரயில் சேவை இல்லாததால், தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள், தொழிலாளா்கள், அரசு, தனியாா் ஊழியா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் பாதைகளிலும் தென்காசி, பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி ரயில் பிரிவில் இருந்து மட்டுமே சென்னைக்கு தினசரி ரயில் சேவை இல்லாத, ஒரே முக்கிய வழித்தடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸை தினசரி சேவையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கங்கள் இணைந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.