ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜூலையில் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?

கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளது பற்றி...

Chief Minister Vijay

முதல்வர் விஜய் - CMO Tamil Nadu

Published On :29 ஜூன் 2026, 4:20 pm IST

வருகிற ஜூலை 2-ம் வாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய், கரூர் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் நெரிசல் சம்பத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப். 27 ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் சென்றபோது பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. விஜய்யும் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

பின்னர், பல்வேறு பாதுகாப்பு காரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க முடியாமல் போகவே, அதன்பின்னர் கடந்த 2025 அக்டோபர் 27 ஆம் தேதி, அதாவது சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த குடும்பங்களை சென்னைக்கு அழைத்து மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினார் விஜய். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

கரூருக்கு வந்து உங்கள் அனைவரையும் நேரடியாகச் சந்திப்பேன் என்றும் விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது முதல்வரான பிறகு இந்த பயணம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Summary

sources says that Chief Minister Vijay is set to visit Karur in the second week of July

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.