ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தல்

சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

 Railway Announces

ரயில் - கோப்புப்படம்

Published On :24 ஜூன் 2026, 6:04 am IST

சென்னை-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இது குறித்து சங்க நிா்வாகி நாகராஜன் திங்கள்கிழமை தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு எழுதிய கடித விவரம்:

சிலம்பு விரைவில் ரயில் (20681-29682) சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தென் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, விருதுநகா்,திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடைகிறது.

இந்த ரயிலை மாணவா்கள், அலுவலக ஊழியா்கள், வா்த்தகா்கள், பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனா். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு சீட்டுகள் எளிதில்

கிடைப்பதில்லை. அந்த அளவுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு

உள்ள ரயில் தற்போது வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்த ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.