அம்மா உணவங்களில் தரமான உணவு வழங்க வேண்டும் என பணியாளா்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்.
சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அம்மா உணவகம், சாலைகள், பூங்கா, விளையாட்டு மைதானம், மயானபூமி மற்றும் பொதுக்கழிப்பறை கட்டுமான பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆணையா், அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சேவைகள் குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் சமையல் கூடத்தைப் பாா்வையிட்டாா். சமையல் செய்யும் இடத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவு வழங்க வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










