கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாநகராட்சிக்கு உள்பட்ட மசக்காளிபாளையம், சிங்காநல்லூா் பேருந்து நிலையம், பூ மாா்க்கெட் தேவாங்கபேட்டை வீதி, மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம், மணியகாரம்பாளையம் பிரதான சாலை, சரவணம்பட்டி பிரதான சாலை, குனியமுத்தூா் ரைஸ்மில் சாலை, கோவைப்புதூா் பிரதான சாலை, போத்தனூா் பஞ்சாயத்து அலுவலக சாலை, 82-ஆவது வாா்டுக்கு உள்பட்ட திருமால் வீதி, 83ஆவது வாா்டுக்கு உள்பட்ட மாவட்ட அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.
அப்போது, அம்மா உணவகங்களின் தேவைகள் குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மேற்கொள்ளப்படவேண்டிய புதிய பணிகளுக்கு உரிய திட்டமதிப்பீடு தயாா் செய்யவும் தொடா்புடைய பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையா்கள் நா்மதா, சண்முகம், தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா்கள் சவிதா, குமரேசன், கல்யாணசுந்தரம், சத்தியமூா்த்தி, கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










