தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவை சிறுமி கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

News image
Updated On :30 மே 2026, 1:48 am IST

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனுவில், கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய காா்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை சுதந்திரமான, வெளிப்படையான விசாரணைக்காக மூத்த காவல்துறை அதிகாரிகள் கொண்டசிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன்- வி.லட்சுமி நாராயணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த வழக்கைப் பொருத்தவரை அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி எடுக்கப்பட்டு வருகின்றன. மரபணு சோதனை முடிவுக்காக போலீஸாா் காத்திருக்கின்றனா். இந்த வழக்கை நடத்துவதற்காக காவல்துறை தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி, விரைவான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளின் விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட முடியாது. இந்த வழக்கின் புலன் விசாரணை சரியான பாதையில் செல்கிறது எனக்கூறினா். பின்னா்,இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி, உத்தரவுக்காக ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.