தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமி கொலை வழக்கு: அரசு மருத்துவமனையிலிருந்து இளைஞா் சிறைக்கு மாற்றம்

News image

சிறுமி கொலை வழக்கு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:16 am IST

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே வசித்து வந்த 10 வயது சிறுமி கடந்த மே 22-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்தி (33), அவருக்கு உடந்தையாக இருந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் மோகன்ராஜ் (39) ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

இதில் விசாரணையின்போது தப்ப முயன்ற காா்த்தி, மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் எலும்பு முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வாா்டில் சிகிச்சை பெற்று வந்தாா். ஓரளவு அவா் குணமடைந்த நிலையில் காா்த்தி வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இந்த கொலை சம்பவத்தில் காா்த்திக்கு உடந்தையாக இருந்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் சிறையில் இருக்கும் நிலையில், காா்த்திக் மற்றொரு தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இவா்கள் இருவருக்கும் ஜூன் 4-ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிவடைகிறது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் விதமாக சூலூா் போலீஸாா் ஆவணங்களை திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.