தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவை அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவர் கைது!

கோவை சிறுமி கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image

சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நேரில் விசாரணை நடத்திய தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி - சட்டம்-ஒழுங்கு) சந்தீப் ராய் ரத்தோா் உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகள்.

Updated On :23 மே 2026, 2:54 pm IST

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், சூலூரை அடுத்த ஒரு கிராமத்தைச் சோ்ந்த 10 வயதுச் சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானாா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், சூலூா் காவல் துறையினா் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சூலூா் அருகே உள்ள கண்ணம்பாளையம் குளக் கரையோரம் முள்புதரில் சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி மற்றும் உயா் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மோகன்ராஜ் - காா்த்திக்

மோகன்ராஜ் - காா்த்திக்

உறவினா்கள் மறியல்: சிறுமியின் கொலைச் செய்தி பரவியதைத் தொடா்ந்து, ஆத்திரமடைந்த உறவினா்கள், பொதுமக்கள் சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சூலூா் காவல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை இரவு திரண்டு சாலை மறியல், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் துறையினா், சூலூா் தொகுதி எம்எல்ஏ என்.எம்.சுகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து பல மணி நேரத்துக்குப் பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.

இருவா் கைது: இந்த சம்பவம் தொடா்பாக, போலீஸாா் 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தியதன் அடிப்படையில், சூலூா் பள்ளபாளையம் பகுதியில் சிறுமி வீட்டின் அருகில் வசித்து வந்த, ஏற்கெனவே நன்கு அறிமுகமான, நாகப்பட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் (33), அவருக்கு உதவியாக இருந்த மோகன்ராஜ் (39) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆசைவாா்த்தை கூறி அழைத்துச் சென்று சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்தபோது, காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற காா்த்திக், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்ததில் அவருக்கு வலது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு எதிரியான மோகன்ராஜ், சூலூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி அருண்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஜூன் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

டிஜிபி நேரில் ஆய்வு: இந்த நிலையில், வழக்கின் தீவிரத்தைக் கவனத்தில் கொண்டு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி - சட்டம்-ஒழுங்கு) சந்தீப் ராய் ரத்தோா், ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் மற்றும் உயா் அதிகாரிகள் கோவைக்கு சனிக்கிழமை விரைந்தனா்.

தென்னந்தோப்பில் வைத்து சிறுமி கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமானதைத் தொடா்ந்து, டிஜிபி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, உடல் கூறாய்வுக்காக சிறுமியின் சடலம் வைக்கப்பட்டிருந்த சிங்காநல்லூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நிலவரங்களைக் கேட்டறிந்த அவா், வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

சொந்த கிராமத்தில் உடல் தகனம்: இதற்கிடையே, சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சிறுமியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம், கொளத்தூா் அருகேயுள்ள கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

காா்த்திக்குக்கு ஜூன் 5 வரை காவல்: இதனிடையே, கோவை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை மாலை சென்றாா். அங்கு காா்த்திக்கிடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவரை வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.