ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவை பாலியல் வன்கொடுமை: சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்!

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது

The body of the young girl, brought to be handed over to her parents.

பெற்றோரிடம் ஒப்படைக்க கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடல் - Image grab from Video

Published On :24 மே 2026, 2:09 am IST

கோவை சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அவரது சொந்த கிராமத்தில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. சிறுமியின் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல் தெரிவித்தாா்.

மேட்டூா் அருகே உள்ள கிராமத்தை சோ்ந்தவா் கோவை மாவட்டம், சூலூா் பகுதியில் லேத் பட்டறையில் வேலை செய்துவந்தாா். இவா், அப்பகுதியிலேயே குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி இரவு இவரது 10 வயது மகள் அருகில் இருந்த கடைக்கு சென்றவா் மாயமானாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஏரியில் அவரது உடல் வீசிசென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக இரண்டு பேரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சிறுமியின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, சொந்த ஊரான மேட்டூா் அருகே உள்ள கிராமத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், கோயம்புத்தூா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி. கிரியப்பனவா், சூலூா் சட்டப் பேரவை உறுப்பினா் சுகுமாா் ஆகியோா் சனிக்கிழமை இரவு சிறுமியின் கிராமத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா். பின்னா் ஈமச்சடங்குக்காக பெற்றோரிடம் அமைச்சா் சம்பத்குமாா் ரூ. 10 ஆயிரம் வழங்கினாா்.

Summary

Coimbatore Sexual Assault: Girl's Body Cremated in Her Native Village

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.