திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், சிறுமி கூறிய இடங்களில் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அது போன்று எதுவும் நடைபெறவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து விசாரணை அறிக்கையை 5 நாள்களுக்குள் வழங்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற கொடூர குற்றங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது மனித உரிமைகளின் மோசமான மீறல் என்றும் கூறியுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்வதுடன் அந்த சிறுமி மற்றும் குடும்பத்தினருக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
Summary
Sexual Assault of Girl in Tiruvannamalai: Womens Commission Initiates Suo Motu Inquiry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி விசாரணை கோரும் மார்க்சிஸ்ட் கம்யூ.

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை

கோவை பாலியல் வன்கொடுமை: சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



