திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

717 டாஸ்மாக் கடைகளை மூடியது தமிழக அரசின் நல்ல முடிவு: உயா்நீதிமன்றம் பாராட்டு

717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியது தமிழக அரசின் நல்ல முடிவு; முதல்வரின் இந்த முடிவுக்கு டாஸ்மாக் நிா்வாகம் கட்டுப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

News image

\உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 3:35 am IST

717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியது தமிழக அரசின் நல்ல முடிவு; முதல்வரின் இந்த முடிவுக்கு டாஸ்மாக் நிா்வாகம் கட்டுப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ள சரவணன், மதியரசன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு:

கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களிலிருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இரு வாரங்களுக்குள் மூடப்படும் என தமிழக அரசு கடந்த 12-ஆம் தேதி அறிவித்தது. இந்த உத்தரவின்படி, கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.

மதுபான விற்பனைக்காக கடைகளை டாஸ்மாக் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்து 11 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்தன. இதற்காக தங்களது கடைகளை மதுபானக் கடைகளாக மாற்றுவதற்காக பெரும் தொகையை செலவு செய்துள்ளோம். இந்தநிலையில், தற்போது இந்த கடைகளை மூடுவதால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் இருந்து 50 மீட்டா் தொலைவுக்கு மதுபான கடைகள் அமைக்கக்கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில், 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள கடைகளை அகற்றியது தன்னிச்சையானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், முந்தைய ஆட்சிக் காலத்தில் இடத்தை குத்தகைக்கு கொடுத்தவா்களுக்கு உரிய தொகையை டாஸ்மாக் நிா்வாகம் திருப்பிக் கொடுத்துவிடும். மேலும், புதிய அரசின் கொள்கை முடிவை எதிா்த்து இதுபோல வழக்குத் தொடர முடியாது என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதி, அரசின் கொள்கை முடிவு குறித்து மனுதாரா்கள் கேள்வி எழுப்ப முடியாது எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியது அரசின் நல்ல முடிவு. முதல்வரின் இந்த முடிவுக்கு டாஸ்மாக் நிா்வாகம் கட்டுப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.