திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகத்தில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

News image

டாஸ்மாக் கடைகள் - File photo

Updated On :24 மே 2026, 2:03 am IST

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற மறுநாள் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க. விக்னேஷ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூட கடந்த மே 11-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

தமிழகத்தில் இதுவரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் க.விக்னேஷ் அறிவுறுத்தினாா்.

மூடப்பட்ட மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளா்களின் நலன் பாதிக்காத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மீள் பணியமா்த்துமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

மதுக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு

தமிழகத்தில் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப் பணியாளா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆய்வுக் கூட்டத்தில் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தியதாக தமிழக அரசு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை

மாவட்ட அளவிலான களப்பணியாளா்கள் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளாா். மேலும், கலால் மேற்பாா்வை அலுவலா்கள், மதுபான ஆலைகள் விதிமுறைகளுக்குள்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமீறல்களுக்கு உடந்தையாகச் செயல்படும் அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.