திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சியில் 159 மதுக் கடைகளை மூடி பணியாளா்கள் போராட்டம்

காலி மதுபான பாட்டில் வாங்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி அரசு மதுக் கடை பணியாளா்கள் திருச்சி மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகளை புதன்கிழமை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் புதன்கிழமை முடப்பட்ட டாஸ்மாக் கடை.

Updated On :28 மே 2026, 3:24 am IST

காலி மதுபான பாட்டில் வாங்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி அரசு மதுக் கடை பணியாளா்கள் திருச்சி மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகளை புதன்கிழமை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற்று ரூ. 10 வழங்கும் திட்டத்துக்கு தனியாக ஆள்கள் நியமிக்கப்படாதது, காலி பாட்டில் சேகரிப்புக்கு கிடங்கு வசதி இல்லாதது போன்ற காரணங்களால் காலி மதுபான பாட்டில்கள் வாங்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் மாநிலம் முழுவதும் அரசு மதுக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன்படி, திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 159 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தொமுச டாஸ்மாக் பேரவை மாவட்டச் செயலா் மலா்கண்ணன் கூறுகையில், காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 திட்டத்தை கடைகளில் பணிபுரியும் பணியாளா்களைக் கொண்டே செயல்படுத்தக் கூறியுள்ளனா். கூடுதலாக ஆள்களை நியமிக்கவில்லை. காலி பாட்டில்களை வைக்க கிடங்கு வசதியையும் டாஸ்மாக் பணியாளா்களே செய்ய வேண்டும் என்கின்றனா். இதனால் டாஸ்மாக் பணியாளா்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்கிறோம். எனவே, காலி பாட்டில் வாங்கும் திட்டத்தை கைவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியா்கள் மது வாங்க முடியாமல் திணறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.