தமிழநாட்டில தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் கொளுத்திவந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி, தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் நிலவி வருகின்றன.
இந்தாண்டு தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட 6 நாள்களுக்கு முன்பாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளது.
இன்று (மே 16) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Chennai Meteorological Centre has stated that the Southwest Monsoon is likely to commence in Tamil Nadu today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










