கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளில் முதுகெலும்பாக கருதப்படும் தென்மேற்குப் பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஜூன் மாதத்தில் தொடங்குவது வழக்கம். கேரளத்தை மையமாக வைத்து இந்த பருவமழை தொடங்கும்.
இந்த நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை நாளை மறுநாள் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த வருடம் தென் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 4இல் தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள், கேரளத்தில் பருவமழை தொடங்குகிறது. மத்திய கிழக்கு, வடகிழக்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கான சூழல் நிலவி வருகின்றது.
Summary
The India Meteorological Department has stated that the Southwest Monsoon is expected to commence in Kerala on June 4.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










