தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எரிபொருள் நெருக்கடி: வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்த ஆளுநர் ஆர்லேகர்!

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

News image

பாதுகாப்பு வாகனம் குறைப்பு - video crop

Updated On :16 மே 2026, 11:18 am IST

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில், நாட்டில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஈரான் போர்ப் பதற்றம் போன்ற சில காரணங்களால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனையடுத்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் விதமாக, ஆளுநர் ஆர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அரசு மற்றும்  தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் செல்லும்போது 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், தமிழ்நாட்டு ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அணிவகுப்பில் பங்குபெறும் வாகனங்களில் 50 சதவிகித வாகனங்களைக் குறைக்குமாறும், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பெருமளவில் பயன்படுத்துமாறு சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளது. 

Summary

The number of security vehicles provided to Tamil Nadu's Acting Governor, Rajendra Vishwanath Arlekar, has been reduced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.