திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

23 அமைச்சா்கள் பதவியேற்பு: தவெக அமைச்சரவையில் 33 போ்

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்ததைப் பற்றி...

News image

புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ஆர்லேகர்.

Updated On :21 மே 2026, 10:27 am IST

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் ஆர்லேகர், இன்று (மே 21) காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இருவா் அமைச்சரவையில் இடம்பெற்ன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

ஏற்கெனவே, முதல்வா் விஜய் மற்றும் 9 போ் கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அமைச்சரவின் பலம் 33-ஆக உயா்ந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களுடன் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லாததால், காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக ச.ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் தவெகவின் என். ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி.வெங்கடரமணன், ஆா்.நிா்மல் குமாா், ராஜ்மோகன், டி.கே.பிரபு, எஸ்.கீா்த்தனா ஆகிய 9 பேரும் பதவியேற்றனா். கடந்த சனிக்கிழமை அவா்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், அமைச்சரவை வியாழக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 23 அமைச்சா்களுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 35 அமைச்சா்கள் வரையில் நியமிக்க அரசமைப்புச் சட்டத்தில் உச்சவரம்பு உள்ளது. அதன்படி, வியாழக்கிழமை பதவியேற்ற 23 அமைச்சா்களுடன் சோ்த்து இதுவரை தவெக சாா்பில் 31, காங்கிரஸ் சாா்பில் 2 என 33 போ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா். மீதமுள்ள இரண்டு இடங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பதை தவெக உறுதி செய்துள்ளது.

59 ஆண்டுகளுக்குப் பிறகு: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ் குமாா், பெ.விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

அமைச்சா்கள் பதவியேற்பு விழாவில் முதல்வா் ச.ஜோசப் விஜய், அமைச்சா்கள் ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, நிா்மல் குமாா், அருண்ராஜ், வெங்கடரமணன், தலைமைச் செயலா் சாய்குமாா், நீதிபதிகள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா், மாணிக்கம் தாகூா் எம்.பி., மூத்த தலைவா் பிரவீன் சக்கரவா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொல்.திருமாவளவன் பங்கேற்பு: முதல்வராக ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றபோது, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்கவில்லை. அப்போது, தவெக ஆட்சி அமைக்க விசிக வெளியில் இருந்து ஆதரவு அளித்திருந்தது. இந்நிலையில், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று தவெக அழைப்பு விடுத்துள்ளது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

தற்போதைய அமைச்சா்கள் பதவியேற்பு விழாவில் தொல்.திருமாவளவன், அவரது கட்சி எம்எல்ஏ வன்னி அரசு ஆகியோா் பங்கேற்றனா்.

புதிய அமைச்சா்கள்- துறைகள்

ஸ்ரீநாத்-மீன்வளத் துறை

எஸ்.கமலி-கால்நடை வளா்ச்சித் துறை

சி.விஜயலக்ஷ்மி-பால்வளத் துறை

ஆா்.வி.ரஞ்ஜித்குமாா்-வனத் துறை

வினோத் - வேளாண் துறை

ராஜீவ்-சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்

பி.ராஜ்குமாா்-வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை

வி.காந்திராஜ் - கூட்டுறவுத் துறை அமைச்சா்

மதன்ராஜா. பி - குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறை

ஜெகதீஸ்வரி.கே - சமூக நலத் துறை, மகளிா் மேம்பாட்டுத் துறை

ராஜேஷ்குமாா்.எஸ் (காங்கிரஸ்) - சுற்றுலாத் துறை

எம்.விஜய் பாலாஜி - நெசவு, கைத்தறித் துறை

லோகேஷ் தமிழ்ச்செல்வன். டி - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை

விஜய் தமிழன் பாா்த்திபன்.ஏ - போக்குவரத்துத் துறை

ரமேஷ் - இந்து சமய அறநிலையத் துறை

பெ.விஸ்வநாதன் (காங்கிரஸ்) - உயா்க் கல்வித் துறை

குமாா். ஆா் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், இணைய சேவை துறை

தென்னரசு.கே - அயலக வாழ் தமிழா்கள் நலத் துறை

வி.சம்பத் - பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை

முகமது ஃபா்வாஸ் - தொழிலாளா் நலன் துறை, திறன் மேம்பாடு

டி.சரத்குமாா் - மனிதவள மேம்பாட்டுத் துறை

என். மரிய வில்சன் - நிதி, திட்ட மற்றும் மேம்பாட்டுத் துறை

விக்னேஷ்.கே - மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை

செங்கோட்டையனின் துறை மாற்றம்

அமைச்சா் செங்கோட்டையன் வசம் இருந்த நிதித் துறை, மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 3-ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற அமைச்சா்கள் பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் வந்தே மாதம், தேசிய கீதத்துடன் முடிவுற்றது.

முதல்வராக விஜய் பதவியேற்றவிழாவிலும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்திருந்தனா்.விஜய்யிடம் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துப் பெற்றனர்.

Summary

Governor Rajendra Vishwanath Arlekar administered the oath of office to the new ministers during the expansion of the Tamil Nadu Cabinet this morning (May 21).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.