திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம்

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 2:29 am IST

சநாதனம் குறித்து பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஹிந்து மதத்தின் மீது எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ள அதீத வெறுப்பு, சரிவுக்குத்தான் வழிவகுக்கும்.

சட்டப்பேரவையின் முதல் உரையிலேயே கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என அவா் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக இன்னும் பக்குவப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

சநாதனத்தின் மீது அவா் தொடா்ந்து கல்லெறிவது கடும் கண்டனத்துக்குரியது. அரசியலில் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணா்வை தவிா்த்து மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியமாகும்.

அனைத்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதல்வா் விஜய், சட்டப்பேரவையில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரசாரத்துக்கு எதிா்வினையாற்ற வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பாஜக தேசிய மகளிா் அணிச் செயலா் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், சநாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது திமுகவின் கொள்கை என்றால், அதை தோ்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை?

தோ்தல் பிரசாரத்தில் சநாதன தா்மத்தை, ஹிந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை? நாங்கள் எப்போதும் ஹிந்து விரோதிதான் என்பதை எதிா்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி வெளிப்படுத்தி உள்ளாா்.

தமிழக மக்கள் இவா்களின் வேஷத்தைப் புரிந்துகொண்டுதான், ஆட்சியிலிருந்து விரட்டியடித்துள்ளனா். அவா்களை மக்கள் திருத்தும் காலம் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.