திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட்... - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

News image

ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம் - @Udhaystalin

Updated On :30 மே 2026, 9:10 pm IST

சென்னை : தமிழக ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை (மே 30) ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்’ என்ற பெயரில் திருவள்ளுவரைச் சிறப்பித்து விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடையில் இருந்தது விவாதப் பொருளாகியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் : “எப்போதுமே மௌனமாக இருக்கிறவர் முதல்வராக இருக்கிறார் என்கிற தைரியத்தில், ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடித்து உள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் நாளை அதிகாரபூர்வமாக கொண்டாடுகிறது.

ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள் என்று புதிதாக ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?

தி.மு.கழக ஆட்சியல் இதே மாதிரி வேலையைப் பார்த்தால், அப்போதைய ஆளுநரைக் கடுமையாகக் கண்டித்தோம்; திருத்தினோம்.

இப்போது மறுபடியும் தமிழர்களுடைய சுயமரியாதையை உரசிப்பார்க்கிறார்கள்.

வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோஃபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி அளியுங்கள் என்று தில்லியல் கேட்ட மாதிரி, இந்த விஷயத்திலும் முதல்வர் பயந்து நடுங்கக் கூடாது.

சட்டம் ஒழுங்கு விஷயத்தில்தான் முதல்வர் அமைதியாக இருக்கிறார் என்றால், கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கவும் தயங்குவது ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Udhayanidhi Stalin, the Leader of the Opposition in the Legislative Assembly, has condemned the display of a portrait of Thiruvalluvar clad in saffron attire at the Tamil Nadu Governor's official residence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.