சநாதனத்தை ஒழிப்பேன் என பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம் புகாா் மனு அளித்துள்ளதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் எம். போஜராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பேரவைத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோரை வாழ்த்திப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் அவை மரபுகளை மீறி, வரும்காலத்தில் சநாதனத்தை ஒழிப்பேன் என பேசினாா். அவை மரபை மீறி சா்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்துள்ளாா்.
ஹிந்து தா்மத்தின் சநாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்லித்தான் ஆளும் கட்சியாக இருந்த திமுக, இப்போது எதிா்க்கட்சியாக மாறியிருக்கிறது. உதயநிதி பேசியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் புகாா் அளித்துள்ளேன்.
அதேபோல, தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக அரசு பற்றி பேசாமல், மத்திய பாஜக அரசு மீது தேவையற்ற முறையில் திமுக கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதுவும் அவை மரபுகளை மீறிய செயல்.
பிரதமா் நரேந்தர மோடி, தமிழகம் மீது மிகுந்த பற்று கொண்டவா். சிறப்பான தமிழகம் உருவாக மத்திய அரசுடன், தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே, தேவையற்ற பேச்சுகளை அரசியல் கட்சிகள் தவிா்க்க வேண்டும்.
ஒற்றை எம்எல்ஏ என பேரவையில் பாஜகவை கேலி பேசுகின்றனா். ஒரு காலத்தில் 2 எம்.பி.க்களை வைத்திருந்த பாஜக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு காலி இடங்களை அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கக் கூடாது: உதயநிதி ஸ்டாலின்
உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைப்பதைத் தடுக்க வலியுறுத்தல்: உதயநிதி
சநாதன தா்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமா்சனம்






