பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் விதமாக Bus Rapid Transit System திட்ட செயலாக்கம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.45 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சமுக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம், முன்னாள் நீதியரசர் பாட்ஷாவின் பரிந்துரையையொட்டி சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தோம்.
பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என கோரியுள்ளோம்.
தமிழகம் முழுக்க மனைப்பட்டா குறித்து பிரச்னை உள்ளது. மனை, மனைப் பட்டா இல்லாத மக்கள் உள்ளனர். அவர்கள் குறித்துப் பேசியுள்ளேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.
நாம் இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக, அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடு வளர்ந்திருக்கிறோம். நமது வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை தனித்துப் போட்டியிட்டு நாம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் நாம் தவிர்க்க முடியாத சக்தி என்றார்.
கோவையில் நீட் தேர்வு எழுந்தவிருந்த மாணவி, மன அழுத்தம் காரணமாக உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ்ஆப் செய்தி அனுப்பிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணையைச் செயல்படுத்தினால், தனது பதவியைத் துறக்கவும் தயார் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.
184 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இரு பாலர் அந்தஸ்து வழங்கி, அரசாணை வெளியிட்டது.
அன்னூர் பகுதியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கமிஷன், கரப்ஷன் இன்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.
எனது சிரிப்புக்குக் காரணம் என் கணவர்தான் என சின்ன திரை நடிகை அக்ஷயா உருக்கம் தெரிவித்துள்ளார்.
அன்பும் அக்கறையும் கொண்டு என் உலகத்தை பிரகாசமாக்கும் அனைத்து முயற்சிகளையும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் செய்யும் கணவன் கிடைத்ததற்கு என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கனிகா தனது திருமண நாளை சாய்பாபா கோயிலில் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு மணமேடையில் கணவருடன் மாலை மாறிக்கொண்டதைப்போல, சாய்பாபா முன்பு மாலை மாற்றிக்கொண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) சந்தித்துப் பேசினார்.
தவெக அரசு வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கைக்கு திமுகவின் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் ’திறன் தமிழ்நாடு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணியின் மாணவர் மலரை தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை வெளியிட்டார்.
மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரும் அதிமுகவின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் கேப்டன் லயனல் மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலால் அல்ஜீரியாவை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெ. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகர் ஆகிய மூவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜைப் பொருள்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷின் உடல் இன்று காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது.
குற்ற வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு காவல் துறை அழைத்துச் சென்ற நிலையில், மரணமடைந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷின் உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மானாமதுரையில் 3 மாதங்களுக்கு முன்பு காவல்நிலைய விசாரணையின் போது மரணமடைந்த ஆகாஷின் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று(ஜூன் 17, புதன்கிழமை) தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ-240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,240-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தும் தங்க இறக்குமதி 34% அதிகரித்திருக்கிறது.
நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசின் முடிவை விமர்சிக்கும் வகையில் அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
நீட் மறுதேர்வு வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவை தடுக்கும் நோக்கில் டெலிகிராம் செயலிக்கு ஒருவார காலம் கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது.
ருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பல மணிநேரமாக பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர். அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கடையம் உள்ளிட்ட பல இடங்களில் பிஎஸ்என்எல் சேவை முடங்கியது.
எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே அரசு விரைவுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
































