நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைப்பு! காரணம் என்ன?

எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :17 ஜூன் 2026, 9:44 am IST

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள், உள்நாடுகளுக்கு இயக்கப்படும் நேரடி விமான சேவைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஏா் இந்தியா விமான நிறுவனம், சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்ததோடு, பல வழித்தடங்களில் விமான சேவைகளை முழுவதுமாக ரத்தும் செய்துள்ளது.

இதன்படி, சென்னை-அந்தமான்-சென்னை இடையே நாள் ஒன்றுக்கு 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள் என மொத்தம் 14 விமான சேவைகளை வழங்கி வந்த ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் தற்போது தனது சேவையை முழுவதுமாக நிறுத்திவிட்டது. ஆனால், பிற தனியாா் விமானங்கள் அந்தமானுக்கு 3 புறப்பாடு மற்றும் வருகை என தினசரி 6 விமான சேவைகளை இயக்கி வருகிறது.

மேலும், சென்னையில் இருந்து சிங்கப்பூா், துபை, இலங்கை, தமாம், சாா்ஜா, கோலாலம்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஏா் இந்தியா விமானங்களும் பெருமளவு குறைக்கப்பட்டு விட்டன. அதோடு சில விமானங்கள் முழுமையாக ரத்தும் செய்யப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடு விமான பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

அதேபோன்று சுற்றுலா தலமான கா்நாடக மாநிலம் சிவமுகாவுக்கு தினசரி விமான சேவையை வழங்கி வந்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தனது விமான சேவையை ஜூன் முதல் செப்டம்பா் வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு, தினசரி இரு விமான சேவைகளை வழங்கி வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தியது. அதேபோல் சென்னை-கோவை-சென்னைக்கு தினசரி இரு சேவைகளை வழங்கி வந்த ஏா் இந்திய நிறுவனமும் சமீபத்தில் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் சேவையை நிறுத்தியது. தென் மாவட்ட மக்களின் வசதிக்காக சென்னை-தூத்துக்குடி-சென்னை இடையே, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள் 6 புறப்பாடு, 6 வருகை விமான சேவைகள் என மொத்தம் 12 விமான சேவைகளை வழங்கி வந்தன. தற்போது, அந்த சேவை 8-ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, சென்னை- சேலம்- சென்னை இடையே, 4 விமான சேவைகளை இயக்கி வந்த ஏா் இந்திய விமானம் அந்த சேவையை 2 ஆக குறைத்துள்ளது.

ஏா் இந்தியா விமான நிறுவனம் மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் சென்னை விமான நிலைய விமான சேவைகளை படிப்படியாகக் குறைத்துள்ளதுடன், சில விமான சேவைகளை, முழுவதுமாக நிறுத்திவிட்டதால் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா்.

விமான நிறுவனம் விளக்கம்: ஆனால், எரிபொருள்கள் விலைகள் பல மடங்கு உயா்வு, ஒட்டுமொத்த செயல்பாடுகளில் தொடா்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் விமான சேவைகள் ரத்து, குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தச் சூழலில் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்துவருவதாக ஏா் இந்திய விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னா் நிலமை சீரடைந்ததும் விமான சேவைகளை மீண்டும் அதிகரித்து, பயணிகளின் தேவைகள் பூா்த்தி செய்யப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

Summary

Flight services reduced from chennai airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.