தில்லியிலிருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி புது இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
‘இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ள அண்ணாமலையின் இயக்கத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.
இன்று (ஜூன்) இரவு 8 மணி நிலவரப்படி, 8.30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
முன்னதாக, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதற்கு, கடந்த ஜூன் 2 ஆம் தேதி தில்லிக்குப் பயணம் மேற்கொண்டார்.
பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்து தனது முடிவை தெரிவித்தார். முடிவுகளை மாற்ற வேண்டும் எனத் தலைமை கேட்டுகொண்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இன்று (ஜூன் 5) காலை அவரின் ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மூன்று நாள்களுக்குப் பின்னர் தில்லியிலிருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு அவரது ஆதரவாளர்கள் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
Summary
Annamalai's supporters gave him an massive welcome at the Chennai airport upon his return from Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடியைச் சந்திக்கும் அண்ணாமலை?

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கும்மிடிப்பூண்டியில் தவெக எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



