நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 1 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

இன்றைய செய்திகள் ஜூலை 1 - நேரலை

முதல்வர் விஜய்.

4:36 am, 1 ஜூலை 2026

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! வீட்டு உபயோக சிலிண்டர் விலை?

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2026-ல் முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

4:45 am, 1 ஜூலை 2026

புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

4:45 am, 1 ஜூலை 2026

மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

மறைந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

4:45 am, 1 ஜூலை 2026

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவால் புதன்கிழமை காலை மேலும் ஒருவர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

4:45 am, 1 ஜூலை 2026

முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்!

முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இணையவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

4:45 am, 1 ஜூலை 2026

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 1)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 1) சவரனுக்கு ரூ. 800 குறைந்துள்ளது.

4:45 am, 1 ஜூலை 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி; 15-க்கும் மேற்பட்டோர் காயம்

 ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில், புதன்கிழமை அதிகாலை தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் உடல்கருகி பலியாகினர்; 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5:46 am, 1 ஜூலை 2026

அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!

5:46 am, 1 ஜூலை 2026

மருத்துவர்கள் நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து 

5:46 am, 1 ஜூலை 2026

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்! தேர் குடை சரிந்ததால் பரபரப்பு!

5:46 am, 1 ஜூலை 2026

அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்!

8:09 am, 1 ஜூலை 2026

குதிரை பேரம்!

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யே நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரிடம் திமுக புகார் அளித்துள்ளது.

8:09 am, 1 ஜூலை 2026

கடுக்களவு குந்தகமும் ஏற்படாது

தவெகவுக்கு இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

1:40 pm, 1 ஜூலை 2026

விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்!

விபி ஜி ராம்ஜி திட்டத்தில் சில மாற்றங்களும் சில தளர்வுகளும் அவசியமாகிறது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

1:44 pm, 1 ஜூலை 2026

இனி கூகுள் தேவையில்லை... முகநூலில் ஏஐ வசதி! என்னென்ன சிறப்புகள்?

முகநூலிலும் செய்யறிவு (ஏஐ) வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கூகுளில் பெறக்கூடிய தகவல்களைப் போன்று முகநூலிலேயே தகவல்களை பயனர்களால் பெற முடியும் என மெட்டா தெரிவித்துள்ளது.

1:45 pm, 1 ஜூலை 2026

தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சிகளுடனான கூட்டணி பெயர் குறித்து கூட்டத்தில் முடிவு செய்யவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (ஜூக்லை 1) தெரிவித்தார்.

1:46 pm, 1 ஜூலை 2026

இயற்கையாக அமைந்த கூட்டணி!

தவெக தோழமை கட்சிகளுடன் அமைந்த கூட்டணி இயற்கையானது என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூலை 1) தெரிவித்தார்.

2:59 pm, 1 ஜூலை 2026

பும்ரா உடன் பகிர்ந்துகொண்ட முதலிடத்தை இழந்தார் மாட் ஹென்றி!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்ட நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி தற்போது இரண்டாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

3:00 pm, 1 ஜூலை 2026

மெஸ்ஸி, எம்பாபே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்!

நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 60 கோல்களை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

3:45 pm, 1 ஜூலை 2026

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!

மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

4:50 pm, 1 ஜூலை 2026

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதில் யூசர்நேம் எதற்கு? மெட்டாவுக்கு மத்திய அரசு கேள்வி

வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதிலாக யூசர்நேம் அம்சம் கொண்டுவருவதற்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.