ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!

அதிமுக மகளிரணி கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்காதது பற்றி...

AIADMK Women's Wing Meeting: S.P. Velumani and Natham Viswanathan Did Not Participate

கோப்புப் படம் - ENS

Published On :1 ஜூலை 2026, 11:10 am IST

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக மகளிரணி கூட்டத்தில் அதிமுக முன்னால அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்சியில் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்கள்

அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, “என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவியை ஏற்க தயாராக இல்லை. என்னுடன் வந்த 30 மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. நான் மட்டும் எப்படி துணைப் பொதுச் செயலர் பதவியை ஏற்க முடியும்?" என்று அவர் பேசியுள்ளார்.

அதிருப்தி காரணமாகவே இன்றைய மகளிரணி கூட்டத்திலும் எஸ்.பி. வேலுமணி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதனும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Summary

AIADMK Women's Wing Meeting: S.P. Velumani and Natham Viswanathan Did Not Participate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.