ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால் புதன்கிழமை காலை மேலும் ஒருவர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது குறித்து....

death toll from ammonia gas leak rises to 17

அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனை - எக்ஸ்

Published On :1 ஜூலை 2026, 9:28 am IST

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவால் புதன்கிழமை காலை மேலும் ஒருவர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.

இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 70 க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 28 ஆம் தேதி வரையில் சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை(ஜூலை 1) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்க் (25) உயிரிழந்தார். இதையடுத்து, அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, மஞ்சங்காரணை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்குன்றம் தனியார் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமாகியுள்ளனர்.

மேலும், மருத்துவமனைகளில் உள்ள 38-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

death toll from ammonia gas leak rises to 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.