ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள்

தவெகவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்திருப்பது பற்றி...

CPIM CPI

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு - X

Published On :1 ஜூலை 2026, 1:12 pm IST

தவெகவுக்கு இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மாலை நடைபெறும் தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யை, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை நேரில் சந்தித்தனர்.

அப்போது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.

அப்போது பெ. சண்முகம் பேசியதாவது:

“தவெக அரசு அமைவதற்கு இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்துள்ளது. அது தொடரும், கடுக்களவு குந்தகமும் ஏற்படாது. அதனை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

தவெகவின் விருந்தில் மட்டுமே நாங்கள் கலந்துகொள்ளவில்லை. மற்றபடி அரசுக்கான ஆதரவு என்பது தொடரும். திமுகவிலிருந்து வெளியேறிய கட்சிகள், திமுகவை விமர்சிப்பது ஜனநாயகத்துக்கு நல்லது.

தவெக தலைமையில் கூட்டணி அமையப் போவதாக முதல்வரோ, மற்ற அமைச்சர்களோ இதுவரை எங்களிடம் எதுவும் பேசவில்லை.

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக எங்கள் குழு தொடர்ந்து போராட்டங்களை நடத்தும்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் எனக் கூறுவதெல்லாம் ஏற்புடையது அல்ல. அப்படி எந்தவொரு சூழலில் தமிழ்நாட்டில் இல்லை. நாங்கள் உறுதியான ஆதரவு அளித்திருக்கிறோம். மற்றவர்கள் ஆட்சியில் பங்கேற்றுள்ளார்கள். போதுமான பெரும்பான்மை இருக்கிற சூழலில் ஸ்டாலின் சொல்வதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

There won't be even the slightest setback to the support for TVK! — CPIM, CPI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.