வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

இது பீஸ்ட் மோட்... மெஸ்ஸி, எம்பாபே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்!

நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் நிகழ்த்தியுள்ள சாதனை குறித்து...

News image

எர்லிங் ஹாலண்ட் - படம்: ஏபி

Updated On :1 ஜூலை 2026, 5:40 pm IST

நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 60 கோல்களை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் அர்லிங்டனில் டல்லாஸ் கால்பந்து திடலில் நேற்றிரவு (ஜூன் 30) நடைபெற்ற போட்டியில் நார்வே மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகள் மோதின. இதில் நார்வே 2-1 என்ற கோல்கள் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நார்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் 86ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இத்துடன் இந்த உலகக் கோப்பையில் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த வெற்றியுடன் நார்வே தனது முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்றுள்ளது. போட்டிக்குப் பிறகு மீண்டும் அணியினர் வைக்கிங் ரோ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஹாலண்ட் தங்களது பாரம்பரியமான ஹெல்மெட்டை அணிந்து ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.

இத்துடன் சர்வதேச அளவில் 60 கோல்களை அதிவேகமாக நிறைவுசெய்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். முன்னதாக, புஸ்கஸ் 63 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்ததே முதலிடத்தில் இருந்தது.

மொத்தமாக எர்லிங் ஹாலண்ட் 260 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பேவின் சாதனைகளை அடித்து நொறுக்கும் வீரராக ஹாலண்ட் வளர்ந்து வருகிறார்.

1. எர்லிங் ஹாலண்ட் - 53 போட்டிகளில் 60 கோல்கள்

2. ஃபெரெங்க் புஸ்காஸ் - 63 போட்டிகளில் 60 கோல்கள்

3. கிளியன் எம்பாப்பே - 101 போட்டிகளில் 60 கோல்கள்

4. லியோனல் மெஸ்ஸி - 122 போட்டிகளில் 60 கோல்கள்

5. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 130 போட்டிகளில் 60 கோல்கள்

Summary

60 goals in fewer matches than Messi and Mbappe... Erling Haaland's record!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.