ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 10:09 am IST

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் 3 உறுப்பினர் பதவி ராஜிநாமாவுக்கு அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் இன்று (ஆக. 9) ஒப்புதல் அளித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மாநில அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் அஜிதா பட்டாச்சார்யா, அனிமா ஹன்ஸ்டா, ஜமால் அஹமது ஆகியோரின் ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் தாங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மமதா பானர்ஜி இன்று (ஆக. 10) குற்றம் சாட்டினார்.

Summary

கார் மீது கற்களை வீசிக் கொல்ல முயற்சி: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு!

சட்டப் படிப்பு மற்றும் ஆய்வுக்கான தேசிய அகாடமி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கான சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்தை அழைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுக்குத் தேவை நீதியே தவிர, அரசியல் ஆதரவு அல்ல என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று (ஆக. 9) தெரிவித்தார்.

குடும்ப வறுமையால் கடன்பட்டு பயிற்சித் தேர்வுக்குத் தயாராகும் மாணவனின் தோல்வி அவனுடையது அல்ல, அரசாங்கத்தினுடையது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி (ஆக. 9) தெரிவித்தார்.

மாணவர்களின் கோரிக்கைகளுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஆஜ. 9) தெரிவித்தார்.

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

கையில் ‘நாட்டாமை குடும்பம்' என்று தனது ஆதரவாளர்கள் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனடாவில் இந்தியப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 மாதங்களுக்குப் பிறகு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60,000 விவசாயிகளை ஏமாற்றுவதா? என்ற கேள்வியை எழுப்பிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் நில அதிர்வுகள் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.

தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நிராகரிக்க காரணம் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) விளக்கம் அளித்துள்ளார்.

ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், அவர் சிலருடன் கலந்துரையாடுவது போல விடியோ ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு மேற்கொள்ள இன்றே(ஆக. 9) கடைசி நாளாகும்.

வகுப்பைப் புறக்கணித்து விட்டு, பள்ளி சுவர் ஏறி குதித்து வெளியேறிய போது படுகாயம் அடைந்த மாணவர் பலியானார்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் ஐந்து நாள்களுக்குப் பிறகு பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 9) முதல் அனுமதி அளித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) 5,543 கன அடியாக குறைந்தது.

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்தக் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

நீட் போராட்டங்களின் போது, ஜென் ஸி தலைமுறையை தவறாக வழிநடத்த செய்யப்பட்ட முயற்சியால் ராஜிநாமா செய்ததாக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் வண்ண விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, ஷாலினி சிங்கிடம் வண்ண விருதை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.