ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு! 3 அதிகாரிகள் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு அரசு ஒப்புதல்!

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் 3 உறுப்பினர் பதவி ராஜிநாமாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து...

Jharkhand Guv accepts resignations of 3 JPSC members; State Govt agrees to CID, ED probes, fast-track court

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தேவேந்திர நாத் மஹ்டோ, இளைஞர்கள் - பிடிஐ

Published On :9 ஆகஸ்ட் 2026, 10:03 pm IST

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் 3 உறுப்பினர் பதவி ராஜிநாமாவுக்கு அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் இன்று (ஆக. 9) ஒப்புதல் அளித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மாநில அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் அஜிதா பட்டாச்சார்யா, அனிமா ஹன்ஸ்டா, ஜமால் அஹமது ஆகியோரின் ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் புகார் எழுப்பினர்.

இது குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவிலும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு தகவலும் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து உரிய முறையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஆள்சேர்ப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் விசாரிப்பதற்காக ஜார்க்கண்ட் அரசு பலமுனைச் செயல் திட்டம் ஒன்றை அறிவித்தது.

இதன்படி, 14-வது ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் 2023-25 ​​காலகட்டத்திற்கான நிலுவை ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிஐடி (CID) விசாரணை நடத்துதல், சந்தேகத்திற்குரிய நிதி முறைகேடுகள் குறித்து அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரணை மேற்கொள்ளுதல், விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைத்தல் மற்றும் ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான நிபுணர் குழு அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஜார்க்கண்ட் அமைச்சர் சுடிவா குமார் சோனு தெரிவித்துள்ளார்.

Summary

Jharkhand Guv accepts resignations of 3 JPSC members; State Govt agrees to CID, ED probes, fast-track court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.