ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!

மாணவர்களின் கோரிக்கையை ஜார்க்கண்ட் அரசு ஏற்றது பற்றி...

Students at the protest site.

போராட்டக் களத்தில் மாணவர்கள். - படம் - பிடிஐ

Published On :17 ஆகஸ்ட் 2026, 10:36 pm IST

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் போராடும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ஜார்க்கண்ட் அரசு இன்று (ஆக. 17) ரத்து செய்துள்ளது.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஆளும் அரசுக்கு எதிராக தங்களது எதிா்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஹேமந்த் சோரன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் உருவ பொம்மைகளை ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) எரித்தனர்.

இதையடுத்து, ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சி. இல்லையெனில், ஜார்க்கண்ட் முழுவதிலும் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் பேசியதாவது:

ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வுகளை ரத்து செய்யப்படுகிறது. மேலும், டேட்டா புராசஸிங் பிரைவேட் லிமிடெட் (TDPL) நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது.

இளைஞர்களின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான கோரிக்கை, ஜேபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வு தொடர்பானது. இதுகுறித்த விசாரணை ஏற்கெனவே நடைபெற்று வருகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் விரிவான விசாரணையை நடத்துவோம். சில சமயங்களில் நாங்கள் சொல்வது சரி என்றும், மற்ற சமயங்களில் மாணவர்கள் சொல்வது சரி என்றும் தோன்றுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவும் (எஸ்ஐடி) குற்றப் புலனாய்வுத் துறையும் (சிஐடி) விசாரணைகளை நடத்தி வருகின்றன. மேலும் இந்த விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான விவகாரம் என்பதால் சில உண்மைகளை இங்கு கூற இயலாது.

2014 முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அனைத்து ஜேபிஎஸ்சி தேர்வுகளையும் ஆய்வு செய்யுமாறு சிஐடி-க்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். விசாரணை ஏற்கெனவே தொடங்கிவிட்டதால், அது விரிவாக நடத்தப்பட வேண்டும் என்று ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

Summary

Acceding to the demands of protesting students in Ranchi, Jharkhand, the state government cancelled the exams today (August 17).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.