ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாட்டாமை குடும்பம் எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்- ஆதரவாளர்களுக்கு சரத்குமார் அறிவுறுத்தல்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்குமார் பேசியதாவது....

Sarathkumar has urged his supporters to get tattoos that read 'Nattamai Family

சரத்குமார்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 3:56 pm IST

கையில் ‘நாட்டாமை குடும்பம்' என்று தனது ஆதரவாளர்கள் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை என்னுடன் பயனித்தவர்கள் இன்று வரை என்னுடன் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் பெரிய மகிழ்ச்சி. அவர்கள் அரசியல் ரீதியாக வேறு இடங்களில் இருந்தாலும் என்மீது இன்றளவும் பாசத்தோடு இருக்கிறார்கள்.

அந்த பாசப் பிணைப்புதான், நாட்டாமை குடும்பம் என்று அனைவரும் அடையாளத்தை வைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என எண்ணத் தோற்றியது. நானும் நாட்டாமை குடும்பம் என்று பச்சை குத்தியிருப்பேன். ஆனால் படப்பிடிப்பு இருக்கும் காரணத்தினால் குத்தவில்லை. படப்பிடிப்பு முடியவும் என் கையிலும் நாட்டாமை குடும்பம் என்கிற முத்திரை இருக்கும்.

பச்சை குத்துவது பலருக்கு புதிதாக இருக்கலாம். என்னுடன் பயணித்தவர்கள் உணர்வோடு செய்து கொள்வதுதான் பச்சை குத்துவது. இது அனைவருக்கும் கட்டாயம் கிடையாது. சிலருக்கு அது குத்த இயலாது. மருத்துவ ரீதியாக ஒவ்வாது. இது ஒரு கிரீன் கார்டு போலத்தான். பச்சை குத்துவது என்பது உணர்வை உறுதிப்படுத்துவதுதான்.

பச்சை குத்துவது அந்த காலத்தில் இருந்து உள்ளது. நான் தேசியக் கொடியை எனது வலது தோள்பட்டையில் பச்சை குத்தியுள்ளேன். தேசப் பற்று எனக்கு அதிகம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Summary

BJP leader and actor Sarathkumar has asked his supporters to get 'Nattamai Family' tattooed on their hands.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.