ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்றிருப்பது பற்றி...

15 New Judges Sworn In at Madras High Court

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவியேற்பு.

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:47 pm IST

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும் வகையில் 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவா், பரிந்துரைக்கப்பட்ட 19 பேரில் 15 பேரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டாா்.

அதன்படி, என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமாா், ஆா்.ஆா்.விவேகானந்தன், எஸ்.ரவிக்குமாா், என்.திலீப்குமாா், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால் ஆகிய 8 வழக்குரைஞா்களும், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகா், எஸ்.காா்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 பேரும் என மொத்தம் 15 போ் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளும் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75-ஆக உள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள 15 நீதிபதிகளுடன் சோ்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் காலியிடங்களின் எண்ணிக்கை 9-ஆக குறைந்துள்ளது.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், 15 நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 15 நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

15 newly appointed judges took the oath of office at the Madras High Court on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.