ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வகுப்பைப் புறக்கணித்து பள்ளி சுவர் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலி

வகுப்பைப் புறக்கணித்து பள்ளி சுவர் ஏறிய மாணவர் தவறி விழுந்து பலியான சம்பவம் பற்றி...

Vishnu, the student who lost his life.

பலியான மாணவர் விஷ்ணு. - படம் - தினமணி

Published On :9 ஆகஸ்ட் 2026, 10:31 am IST

வகுப்பைப் புறக்கணித்து விட்டு, பள்ளி சுவர் ஏறி குதித்து வெளியேறிய போது படுகாயம் அடைந்த மாணவர் பலியானார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் த.வீ.ச. ( டிவிசி) அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருப்பாணாழ்வார் தெருவை சேர்ந்த ராஜன் மகன் விஷ்ணு (15) பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் கபடி விளையாட்டு வீரார். கடந்த 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பை புறக்கணித்துவிட்டு வீட்டிற்கு செல்ல இவரும் மற்றொரு மாணவரும் முயற்சி மேற்கொண்டனர்.

இதில் விஷ்ணு பள்ளி காம்பவுண்ட் சுவர் ஏறும்போது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனடியாக ஸ்ரீ முஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். .

இந்நிலையில் மாணவர் விஷ்ணு சிகிச்சை பலனின்றி ஆக. 8 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு இறந்து விட்டார். இது குறித்து அவர் தாய் கவிதா (55) கொடுத்த புகாரின் மீது ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

விஷ்ணுவின் தந்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் கூலித் தொழிலாளர் ஆவார். இவரோடு மற்றொரு மாணவனும் பள்ளி சுவர் ஏறிக் குதித்துள்ளார்.

பள்ளி மாணவர் இறந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவன் தரப்பில் போராட்டம் செய்வார்கள் என்ற எதிரொலி காரணமாக சேத்தியாதோப்பு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இறந்து போன பள்ளி மாணவனின் வீடு மற்றும் பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கலவரம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) மாலை பள்ளி மாணவனின் உடல் அடக்கம் செய்யப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் வாகனங்கள்

பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரின் வாகனங்கள் - படம் - தினமணி

Summary

A student who sustained severe injuries after skipping class and climbing over the school wall to leave has died.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.