ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுச்சேரி காவல் துறைக்கு வண்ண விருது! ஷாலினி சிங்கிடம் வழங்கிய அமித் ஷா!

புதுச்சேரியில் வண்ண விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுள்ளது குறித்து...

amith shah

வண்ண விருதை ஷாலினி சிங்கிடம் வழங்கிய மத்திய அமைச்சர் அமித் ஷா. - படம்: விடியோ கிளிப்

Published On :9 ஆகஸ்ட் 2026, 9:24 am IST

புதுச்சேரியில் நடைபெற்று வரும் வண்ண விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, ஷாலினி சிங்கிடம் வண்ண விருதை வழங்கினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குச் சென்றார்.

அங்கு, அருணாசலேஸ்வரா் கோயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், அமித் ஷா அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். அங்கிருந்து மத்திய அமைச்சர், காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா இன்று (ஆக. 9) கோரிமேடு காவலர் திடலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுள்ளார். முன்னதாக, திறந்த ஜீப்பில் சென்றவாறு காவல் துறையினரின் பலத்த அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதை, புதுச்சேரி காவல் துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் வழங்கினார்.

Summary

Union Minister Amit Shah is participating in the awards ceremony currently underway in Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.