ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமித் ஷா வருகை! மாமல்லபுரத்தை பார்வையிட மக்களுக்கு தடை!

உள்துறை அமைச்சரின் வருகையால் மாமல்லபுரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

Amit Shah

மத்திய அமைச்சர் அமித் ஷா - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:15 pm IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி, மாமல்லபுர சுற்றுலாத் தலங்களை பார்வையிட மக்களுக்கு வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2022-க்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.

இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் இந்த மாநாடு நாளை (ஆக. 20) நடைபெறவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், கேரளத்தின் வி.டி. சதீசன், கர்நாடகத்தின் டி.கே. சிவகுமார், தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக, இன்றிரவு (ஆக. 19) மாநாடு நடைபெறவுள்ள சொகுசு விடுதியில் தென்மாநில முதல்வர்களுடன் அமித் ஷா இரவு விருந்தில் பங்கேற்கிறார்.

நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாநாடு நடைபெறும் நிலையில், மாலை 3.30 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மத்திய அமைச்சா் அமித் ஷா வழிபாடு செய்யவுள்ளாா்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட பொதுமக்களுக்கு மாலை 5 மணி வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி கோவளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் ஹோட்டல் வளாகம், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விருந்தினா்கள் தங்குமிடங்கள், போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Summary

Amit Shah's visit! Public entry to Mamallapuram restricted tomorrow!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.