ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாடாளுமன்றம் வருவதில் அமித் ஷாவுக்கு என்ன பிரச்னை? பயம் ஏன்? கார்கே கேள்வி!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கார்கே அடுக்கடுக்கான கேள்வி...

kharge

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - ANI

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:20 pm IST

நாடாளுமன்றத்துக்கு வந்து பதிலளிப்பதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என்ன பிரச்னை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து நான்காவது வாரமாக இன்றும் இரு அவைகளையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடக்கி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் கார்கே பேசியதாவது:

“மாணவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அமித் ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள ஒரே கோரிக்கையாகும்.

உள்துறை அமைச்சரை அறிக்கை அளிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தாதது ஏன்? அவர்கள் அவை செயல்படுவதை விரும்பவில்லை, அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் சில தவறுகளைச் செய்துள்ளனர்.

பிரதமரின் புகைப்படம் நாள்தோறும் செய்தித்தாள்களில் வருகிறது, அப்படியிருக்க நாடாளுமன்றத்துக்கு வருவதில் என்ன சிக்கல்? அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு தீர்வைக் கோருகின்றனர். அவைத் தலைவர் ஏன் எங்களைப் பேச அனுமதிப்பதில்லை? என்பதை வருத்தத்துடன் நான் கேட்க விரும்புகிறேன்.

நாங்கள் வெறும் அறிக்கையைத்தான் கோருகிறோம். நாடாளுமன்றம் செயல்படாததற்கு அரசாங்கமும், மோடியும், உள்துறை அமைச்சரும்தான் பொறுப்பு” எனத் தெரிவித்தார்.

Summary

What is Amit Shah's problem with coming to Parliament? Why the fear? Kharge asks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.