/

தமிழக மீனவர்கள் 43 பேருக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

தமிழக மீனவர்கள் 43 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
(கோப்புப்படம்)
Updated On :28 ஜனவரி 2024, 5:43 am

DIN

தமிழக மீனவர்கள் 43 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடிக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ். லியோ ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 43  மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர். 

இவர்களைத் தொடர்ந்து மேலும் 12 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இன்று சிறைபிடித்தனர். இதுவரை 8 விசைப்படகுகள், 55 மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைதான மீனவர்களில் 43 பேரை இன்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் டிசம்பர் 31ஆம் வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.