தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகின
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின.


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின. இதில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் பெற்றோர் செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பி வைக்கும் வசதியை தேர்வுத் துறை செய்துள்ளது. பள்ளிகளுக்கும் மாணவர்கள் நேரில் சென்று மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
ஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் - 94.1 சதவீதம் மற்றும் மாணவர்கள் - 87.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அதிகபட்சமாக விருதுநகர் - 97 சதவீதம் (முதலிடம்), ஈரோடு - 96.3 சதவீதம் (இரண்டாமிடம்), திருப்பூர் - 96.1 சதவீதம் (மூன்றாமிடம்) பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...