சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன்

சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:03 pm

Raghavendran

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியாகின. 

www.tnresults.nic.in 
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 

ஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் - 94.1 சதவீதம் மற்றும் மாணவர்கள் - 87.7 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 1,907 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 238 ஆகும். அதிகபட்சமாக விருதுநகர் - 97 சதவீதம் (முதலிடம்), ஈரோடு - 96.3 சதவீதம் (இரண்டாமிடம்), திருப்பூர் - 96.1 சதவீதம் (மூன்றாமிடம்) பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம் பின்வருமாறு:

இயற்பியல் - 96.4%
வேதியியல் - 95.0
கணிதம் - 96.1%
உயிரியல் - 96.34
விலங்கியல் - 91.9%
தாவரவியல் - 93.9%
வணிகவியல் - 90.30%
கணக்குப் பதிவியல் - 91%
கணினி அறிவியல் - 96.1%

1,001 முதல் 1,100 மதிப்பெண்கள் வரை 71,368 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

901 முதல் 1,000 மதிப்பெண்கள் வரை 1,07,266 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

701 முதல் 800 மதிப்பெண்கள் வரை 1,65,425 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

700 மதிப்பெண்களுக்கு கீழ் 8,60,434 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன் 25-ஆம் தேதி மீண்டும் தேர்வு எழுதலாம். தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.