கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தரம் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

தற்போது, பருவமழைக்காலம் தொடங்க இருப்பதால், விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விதை விற்பனையாளர்கள், விதை கொள்முதல் பட்டியல்களில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:45 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தரம் குறைந்த விதைகளை  விற்பனை செய்தால், அந்த வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தற்போது, பருவமழைக்காலம் தொடங்க இருப்பதால், விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விதை விற்பனையாளர்கள், விதை கொள்முதல் பட்டியல்களில் விதைக்குவியல் எண் குறிப்பிட வேண்டும். விதை உரிமம் பெற்ற இடங்களில் மட்டுமே தரமான விதைகளை இருப்பு வைத்து விற்பனை  செய்ய வேண்டும். விற்பனைக்குரிய விதைகளின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், இருப்பு அளவு மற்றும் விலை உள்ளிட்ட விவரங்களை விவசாயிகள் பார்வையில் படும் படி விளம்பர பலகை வைக்க வேண்டும்.

ஓவ்வொரு விதைக் குவியலுடன் அதன் தரம் பற்றிய பகுப்பாய்வு முடிவுகள் விவரங்களை ஆய்வு செய்யும் போது விதை ஆய்வாளர்களுக்கு கட்டாயம் காண்பிக்க வேண்டும். அதேபோல், இருப்பு வைத்துள்ள விதைக்குவியல்களை ரகம் வாரியாக, குவியல் வாரியாக அடுக்கி வைக்க வேண்டும். மேலும், உரம் பூச்சி மருந்து இல்லாத இடங்களில் வைப்பது அவசியம் ஆகும். விற்பனையாளர்கள் முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, முளைப்புத்திறன் புறத்தூய்மை, இன்த்தூய்மை குறைந்த விதைகளையோ, காலாவதியான விதைகளையோ விவசாயிகளுக்கு விற்பனை  செய்தால் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகியோர் மீது விதைகள் பாதுகாப்பு சட்டம் 1966-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்களின் கைபேசி எண்ணை கட்டாயம் தகவல் பலகையில் குறிப்பிட்டு விவசாயிகள் பார்வையில் படும் படி வைக்க வேண்டும். விதைகள் தொடர்பான குறைகளை தெரிவிக்க 04562-252186 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தரமான விதைகள் கிடைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என விற்பனையாளர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.