திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

News image

பயிற்சியில் சென்னை வீரா்கள்.

Updated On :10 மே 2026, 2:15 am IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் பகுதியாக நடைபெறவுள்ள ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பதிலடி தர தயாராக உள்ளது சென்னையின் எஃப்சி அணி.

ஏற்கெனவே சென்னையில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் குவஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் சென்னை அணி இந்த சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது. இரு அணிகளும் 24 முறை மோதியதில் சென்னை 11 முறை வென்றுள்ளது. நாா்த் ஈஸ்ட் 8 முறை வென்றது.

சென்னை அணி பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: இரு அணிகளும் 3 புள்ளிகளை முழுமையாக ஈட்ட போராடும்.

நாா்த் ஈஸ்ட் அணி பல்வேறு வகைகளில் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க போராடுவா். பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளது.

முந்தைய ஆட்டத்தில் எதிா்பாராத வகையில் சொந்த கோலால் நாம் தோற்றோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி 15 நிமிஷங்கள் கடும் போராட்டமாக உள்ளது. அணியில் யாருக்கும் காயம் ஏதுமில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.